;
Athirady Tamil News

மூன்றாவது திருமணம் செய்யபோகும் கணவர்: பிரித்தானியாவில் தவிக்கும் இந்திய பெண்..!!

0

பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய பெண் இந்தியாவில் இருக்கும் தனது கணவர் மூன்றாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சகோதரர் மூலம் பொலிசில் புகார் அளித்துள்ளார்.குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் பிரீத்தி ஹிமான்சூ சவுஹான் (39).

இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக லண்டனில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அகமதாபாத்தில் இருக்கும் தனது சகோதரர் ஹேமந்த் ஷா மூலம் தனது கணவர் ஹிமான்சூ குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு முறை திருமணமான பிரீத்தி கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2006-ல் ஹிமான்சூவை மணந்துள்ளார்.பின்னர் மாணவர்கள் விசா மூலம் லண்டனுக்கு சென்றுள்ளார். அவருடன் ஹிமான்சூவும் மனைவி சார்புடைய விசா மூலம் அவருடனே லண்டனுக்கு சென்றுள்ளார்.

லண்டனுக்கு சென்ற சில வாரங்களிலேயே பிரீத்தியுடன் சண்டையிட்டு அவரை பிரிந்து ஹிமன்சூ இந்தியா வந்துள்ளார்.

பிரித்தானியா விசா கிடைப்பதற்காகவே தன்னை ஏமாற்றி ஹிமன்சூ திருமணம் செய்து கொண்டதாக பிரீத்தி புகார் மனுவில் கூறியுள்ளார்.

பின்னர் பீரித்தியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் ஹிமான்சூ மனு தாக்கல் செய்த நிலையில் 2012-ல் பிரீத்தி இந்தியா வந்துள்ளார்.

அப்போது தான் இரண்டாவதாக ஒரு பெண்ணை ஹிமன்சூ திருமணம் செய்து பிறகு அவரை விவாகரத்தும் செய்தது தெரியவந்தது.

இது எல்லாவற்றையும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள பிரீத்தி, ஹிமான்சூ அகமதாபாத்தை சேர்ந்த பெண்ணை மூன்றாவது திருமணம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்களிடம் விசாவை கொடுத்து ஹிமான்சூ பணம் வாங்கி கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்த விசாரணையை பொலிசார் தொடங்கியுள்ளார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 5 =

*