;
Athirady Tamil News

ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை..!!

0

கடந்த ஆண்டு ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளபோதும் அவர்களில் குழந்தையின் தாய் யார், தந்தை யார் என்பதைப் பதிவு செய்யும் விஷயங்களில் பிரச்சினை உள்ளது.

ஜேர்மனியின் முனிச் நகரில் 2018ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தைகளில் ஒன்றான Jakobஐ பெற்ற தாய் Steffi.S.ஓரினச்சேர்க்கையாளரான இவர் Antonia என்ற பெண்ணை மணம் செய்துள்ளார், ஆனால், இதனால் Antonia Jakobஇன் சட்டப்பூர்வ தாயாக அறிவிக்கப்படமாட்டார்.

சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் சில பிழைகள் ஏற்பட்டதால், குழந்தைக்கு இரண்டு சட்டப்பூர்வ தாய்மார்கள் இருக்கமுடியாது.

பெற்றோர்களுக்கான உரிமைகள் மாற்றப்படவில்லை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான பிறப்புப் பதிவு முறை நாடு முழுவதும் இன்னும் நிறுவப்படவில்லை.

சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இரண்டு பெண்கள் மணம் செய்துகொண்டாலும், குழந்தையை பெற்ற பெண்ணே அதன் தாயாக கருதப்படுவார், அதை வளர்க்கும் உரிமை அவருக்கே உரியது,ஆனால், ஆண்களுக்கு இந்த அளவு பிரச்சினை இல்லை.

முனிச் திருமணப்பதிவு அலுலகத்தின் இயக்குநரும் பதிவாளருமான Peter Trunk கூறும்போது, ஃபெடரல் உள்துறை அமைச்சகம், ஜேர்மனியின் 16 மாகாணங்களுடனும் கலந்தாலோசிக்கும்வரையில், தோராயமாக இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்த விஷயத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்று தெரிவிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + ten =

*