;
Athirady Tamil News

மேகன் மெர்க்கல் சாயலில் 4 பெண்கள்: மொடலிங் மூலம் எவ்வளவு வருமானம் தெரியுமா? ..!!

0

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் போன்ற சாயலில் உள்ள 4 பெண்கள் மொடலிங் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி-க்கும் அமெரிக்காவின் பிரபல நடிகையான 36 வயது மேகன் மெர்க்கலுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயம் நடைபெற்றது.

இந்நிலையில் வருங்கால இளவரசி மேகனின் உருவத்துடன் பெரும்பாலும் ஒத்துப் போகக்கூடிய உருவ ஒற்றுமையுள்ள சில பெண்கள் மொடலிங் தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருவது தெரியவந்துள்ளது.

சாரா – 35 வயதான இப்பெண் தன் கணவர் ஜபு மற்றும் குழந்தைகளுடன் மான்சஸ்ட்டர் பகுதியில் வசித்து வருகிறார். தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்துவரும் இப்பெண்ணுக்கு தற்போது உலகம் முழுவதிலும் இருந்து மொடலிங் வாய்ப்புகள் குவிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

நிக்கோல் பட்சர்- 23 வயதான இவர் வடக்கு லண்டன் பகுதியில் உள்ள ஏஞ்சல் நகரில் வசித்து வருகிறார். சமூகவலைதளம் மூலம் இவரும் மேகனும் ஒரே சாயலில் இருப்பதாக பலர் கூறியதாக கூறும் நிக்கோல், மொடலிங் தொழிலில் பொழுது போக்காக ஈடுபட்டு வருகிறார்.

கொலன் பெஹலன்- Bromsgrove பகுதியில் வசித்து வரும் இப்பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் 32 வயது பெண்ணான இவர், இளம் வயதில் மொடலாக பணியாற்றியுள்ளதால் தற்போது சுலபமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுசன் ஸ்காட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள கொலன், தொடர்ந்து மொடலாக பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.டேனியல் போர்ன்- Wallingtonல் வசித்து வரும் 38 வயது பெண்ணான இவர் கணவரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

மெர்க்கல் போன்ற சாயலில் உள்ள இப்பெண் பல முன்னணி மொடலிங் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறார். மேகன் போன்ற உடல் மொழிக்காக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் டேனியல் கூறியுள்ளார்.

வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் போன்ற சாயலில் இத்தனை பெண்கள் உள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*