;
Athirady Tamil News

ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக வீட்டு வாடகை இங்குதான்..!!

0

லண்டனில் வீடு வாடகைக்கு எடுக்கப்போகிறீர்களா? ஜாக்கிரதை. ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக வீட்டு வாடகை வசூலிக்கப்படுவது இங்குதான்.

மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை 5398 பவுண்டுகள். இது மற்ற ஐரோப்பிய நகரங்களின் வீட்டு வாடகையைவிட 3700 பவுண்டுகள் அதிகமாகும்.

ECA International நடத்திய ஒரு ஆய்வின் முடிவுகள் வீட்டு வாடகை அதிகம் வசூலிக்கும் நகரங்களில் லண்டன் ஐந்தாவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன, முதலிடத்தைப் பிடித்துள்ளது ஹாங்காங் ஆகும்.

பிரெக்சிட் வாக்களிப்பிற்குப்பின் லண்டனின் நிதித் துறையில் பெரிய அளவு உறுதியில்லாத்தன்மை நிலவுகிறது என்று கூறும் ECA Internationalஇன் Accommodation Services Managerஆன Alec Smith, பிரெக்சிட்டுக்கு நீண்ட காலத்திற்குப் பின்னராவது இந்நிலை மாறுமா என்பது தெரியவில்லை என்கிறார்.

ஐரோப்பிய நாடுகளில் வீட்டு வாடகை அதிகம் உள்ள நகரங்களில் 1 முதல் 9 வரையுள்ள இடத்தைப் பிடித்துள்ள நகரங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 4 =

*