;
Athirady Tamil News

கொழும்பில் ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் உட்பட மூவர் கைது..!

0


கொம்பனிவீதி, மீதொட்டமுல்லை மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், ரயில் நிலையத்திற்கு முன்னாள் 100 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனவும், அவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெல்லம்பிட்டி – மீதொட்டமுல்லை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 30 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

இவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் என, பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், கல்கிசை – படோவிட பகுதியில் 48 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் 18 வயதான இளைஞர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + five =

*