;
Athirady Tamil News

2 கோடி ஒதுக்கீட்டில் மேற்கொண்ட பணி விபரத்தில், மாவை. சேனாதிராஜாவின் விபரம்..!

0


strong>2 கோடி ஒதுக்கீட்டில் மேற்கொண்ட பணி விபரத்தில், மாவை. சேனாதிராஜாவின் விபரம்

நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அனுமதிக்கப்பட்ட 2 கோடி ஒதுக்கீட்டில் மேற்கொண்ட பணி விபரத்தில் இன்று மாவை. சேனாதிராஜாவின் விபரம் கிடைக்கப்பெற்றது.

இதன் பிரகாரம் தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் , அளவெட்டி , மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் , தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை 15 லட்சம் , அளவெட்டி தெற்கு கிராமச் செயலகம் 10 லட்சம் , அளவெட்டி மேற்கு கிராமச் செயலகம் 10 லட்சம்  , அளவெட்டி மகாஜன ச.ச.நிலையம் 15 லட்சம் , தையிட்டி பராசக்தி ச.ச.நிலையம் 10 லட்சம் அதேபோன்று மாவிட்டபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் 15 லட்சம் , மாவிட்டபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் 15 லட்சம்  என சிபார்சு செய்யப்பட்டது.

இதேபோன்று நகுலேஸ்வரம் இலந்தகலட்டி வீதி , கருகம்பானை பொது நோக்கு மண்டபம் , குரும்பசிட்டி வளர்மதி ச.ச.நிலையம் மாவிட்டபுரம் பரா சக்தி ச.ச. நிலையம் , தந்தை செல்வாபுரம் கலைவாணி ச.ச.நிலையம் , பலாலி கிழக்கு முன்பள்ளி ஆகிய ஆறு அமைப்புகளிற்கும் 15 லட்சம் விகிதம் 90 லட்சம் ரூபாவும் வலி.வடக்கு இளைஞர் கழகங்களிற்கான விளையாட்டு உபகரணங்களிற்காக 10 லட்சம் என மொத்தமாக இரண்டு கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 19 =

*