;
Athirady Tamil News

‘கொச்சிக்கடை தமிழர்களை போல, நான் திமிரானவன்’ -அமைச்சர் மனோ கணேசன்..!

0

‘கொச்சிக்கடை தமிழர்களை போல, நான் திமிரானவன்’ -அமைச்சர் மனோ கணேசன்

“நாட்டின் தலைநகரம் கொழும்பு என்பதை, ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டோம். அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முடிவெடுக்கும் மத்திய நிலையமாகவே கொழும்பு திகழ்கிறது.

அதற்கு அடுத்தபடியாக, தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம், கொச்சிக்கடையாகும். அங்கு வாழும் தமிழ​ர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்க​ளை போலவே நானும் திமிரானவன்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“வாக்காளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயர்களை வெட்டிவிட்டு, பெரும்பான்மை இனத்தவர்களின் பெயர்களை புகுத்துவதில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, வள்ளவர். அந்த வெட்டுக்குத்துக்கு நான் ஏமாந்தது இல்லை. எனினும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகிய இருவரும் ஏமாந்துவிட்டனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணி எழுதிய, “இன்னும் பெயர் வைக்கல” எனும் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-10, தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ.ராதாமேதா தலைமையில் நடைபெற்ற அந்த வெளியீட்டு விழாவில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“வெளிநாட்டில் வசித்தாலும் ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணி, தாயத்தை மறக்கவில்லை என்று கூறப்பட்டது. தயாகம் என்றால் என்ன? என்னைப் பொருத்தவரையில் கொழும்பின் தயாகம், கொச்சிக்கடையாகும். அங்குதான் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இது இங்குள்ள சிங்களத் தலைவர்களுக்குத் தெரியாது” என்றார்.

“வெள்ளவத்தையில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று பலரும் நினைத்துகொண்டிருக்கின்றனர். வடக்கில் ஏதாவது சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படும் போது ​அதனை தட்டிக்கேட்டால், வௌ்ளவத்தையில் ஏன்? தமிழர்கள் வாழவில்லையா எனக் கேட்பார்கள். வௌ்ளவத்தையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், கொச்சிக்கடையில்தான், தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். 1983 ஆம் கலவரத்தின் ​போது தமிழர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர். எனினும், கொச்சிக்கடையில் அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டவில்லை” என்றார்.

“கொச்சிக்கடை தமிழர்களிடம், தமிழ்பற்று, வீரம், கோபம், துணிவு மற்றும் தன்னம்பிக்கை உள்ளிட்ட அனைத்தும் இருக்கின்றன. இவற்றை, முதலாவதாக தேர்தலில் போட்டியிடும்போது நான் கண்டேன். கொச்சிக்கடையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் புகுந்த, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான நிலந்தபெரேரா, கடைகளை கட்டும்போது, சுமார் இரண்டுமணிநேரம், அவ்விடத்தில் இருந்து,முழுக்கடைகளையும் உ​டைத்தெறிந்தேன். என்னுடன் இணைந்து அங்கிருந்தவர்களும் உடைத்தெறிந்தனர். அம்மக்களும்கு அந்தளவுக்கு வீரமிருக்கிறது” என்றார்.

“அந்த வீரத்தை, தீர்க்கதரிசனத்தையும், பெப்ரவரி 10ஆம் திகதி வாக்களிப்பிலும் அந்த மக்கள் காண்பிப்பார்கள். அந்த நம்பிக்கை என்னிடத்தில் இருக்கிறது. என்னதான் அரசாங்கத்தில் இருந்தாலும், அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சை எமது கூட்டணி வைத்திருந்தாலும், தமிழர்களுக்கென பிரச்சினைகள் வரும்போதெல்லாம் எனது குரல் ஓங்கியே இருக்கும். அந்த குரல், தமிழர்களுக்காக இன்னுமின்னும் ஓங்கி ஒலிக்கவேண்டுமாயின், எங்களுடைய பலத்தை அதிகரித்து​க்கொள்ளவேண்டும்” எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 4 =

*