;
Athirady Tamil News

மாந்தையில் மூத்த விவசாயிகளுக்கு கௌரவிப்பு..! (படங்கள்)

0


மாந்தை மேற்கு பிரதேசத்தில் உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பிரதேசச் செயலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது பொங்கல் பொங்கப்பட்டு வைபவ ரீதியாக நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மூத்த விவசாயிகள் 13 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பொன்னாடை பேர்த்தி மாலை அணுவித்து பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கேதீஸ்வரன், பிரதேசச் செயலக பணியாளர்கள், கிராம அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 17 =

*