;
Athirady Tamil News

மாந்தையில் யுவதிகளின் ‘சுய தொழில் கண்காட்சி’ (படங்கள்)

0


சுய தொழில் பயிற்சியில் கலந்து கொண்ட யுவதிகளின் ‘சுய தொழில் கண்காட்சி’ இன்று (திங்கட்கிழமை) மாந்தையில் இடம்பெற்றது.

கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்களம் ஆகிய இணைந்து நடத்திய குறித்த கண்காட்சி, மேற்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது பல்வேறு துறைகளில் சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளின் சுய தொழில் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − thirteen =

*