;
Athirady Tamil News

“சரசாலை மக்களே அவதானம்” என்கிறது தினஒளி இணையம்..!

0

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள போதும் சரசாலை கிராம மக்களுக்கு தவறான வாக்குறுதிகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நேற்றைய தினம் சரசாலை பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அரசியல் கட்சிஒன்றின் பிரதிநிதிகள் சிலர் தவறான கருத்தினை விதைத்துவிட்டு சென்றுள்ளனர்.

சரசாலை வடக்கு தெய்வங்கேனி வீதி, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தனால் 15 லட்சம் ஒதுக்கீடு செய்து வீதியின் ஒரு பகுதிகள் புணரமைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

ஆனால் நேற்றையதினம் பிரச்சாரங்களில் ஈடுபட்ட தென்னிலங்கையில் பிரபலமான அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவர் தமது கட்சியின் மூலம் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டது என பொய்யான கருத்துக்களை பரப்பிவிட்டு சென்றுள்ளனர்.

கடந்த வருடம் இறுதியில் தேர்தலை நோக்காக கொண்டு அவ் அரசியல் கட்சியால் ஒரு விளையாட்டு கழகத்திற்கு ஒரு லட்சம் பணத்தினை வழங்கிவிட்டு அப் பணத்தினை கொண்டு பாடசாலை மைதானத்தை புணரமைத்தனர்.

ஆனால் தர்மலிங்கம் சித்தாத்தனால் முன்னெடுக்கப்பட்ட தெய்வங்கேனி வீதி புணரமைப்பு திட்டத்தை தமது கட்சிக்கு உரிமை கொண்டாடுவது தவறான விடையமாகும்.
-தினஒளி இணையம்-

Share this:

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*