;
Athirady Tamil News

சிங்கப்பூர் பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு..! (படங்கள் & வீடியோ)

0


சிங்கப்பூர் பிரதமர் லீ ஷி லூங் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

சட்டம் ஒழங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை அவருக்கு அமோக வரவேற்ப்பு அளித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க அவரது விஜயம் அமைகிறது.

சிங்கப்பூர் பிரதமரை இராணுவ மரியாதையுடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டுள்ளது. நாளை காலை அங்கு அவர் உத்தியோகபூர்வமாக வரவேற்கப்படவுள்ளார்

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமருக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர, வர்த்தக உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

சிங்ப்பூர் பிரதமர் தமது இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்;து பேச்சு நடத்துகிறார்.

சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*