சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு, மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார்.. -கஜதீபன்.

சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் – கஜதீபன்.
சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என வட மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்தார்.
21.01.2018 அன்று வவுனியா திருநாவற்குளத்தில் நகரசபை வட்டாரம் ஒன்றில் போட்டியிடும் சு.காண்டிபனின் அலுவலகத்தை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஒருகாலத்திலே எமது மண்ணிலே சாதிய அடக்குமுறைகள் மிகபலமாக இருந்தது. தீன்டத்தகாவதவர்கள் என்று சிலரை ஒதுக்கி வைத்தோம். அவ்வாறான சாதியம் இருக்கக்கூடாது நாங்கள் எல்லோரும் சமதர்மமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம், அதை வலியுறுத்துகிறோம், அதற்காக போராடுகின்றோம்.
ஆனால் தீன்டத்தகாதவர்கள் என்ற ஒரு சமூகம் இந்த மண்ணிலே இருக்க வேண்டும். தற்போது தேசியக்கட்சியிலே தமிழனத்திற்கு விரோதமாக களத்தில் யார் எல்லாம் நிற்கின்றார்களோ அவர்கள் எல்லாம் தீன்டத்தகாதவர்களே.
மகிந்த ராஜபக்ச, மைத்திரி பால சிறீசேன, ரணில் விக்ரமசிங்க இவர்களிற்குள் பல முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் இ னம், மதம், மொழி என்று வருகின்றபோது அவர்கள் ஒன்றுபடுகின்றார்கள்.
ஆனால் நாங்கள் மிக பலவீனமாக உள்ளோம். யார்யாருக்கு எல்லாம் வாக்களிக்கின்றோம். இது இந்ததேர்தலுடன் மாற்றப்பட வேண்டும்.
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி ரூபாயை பெற்றிருக்கின்றார்கள் ஆனால் தான் மட்டும் பெறவில்லை என்று சிவசக்தி ஆனந்தன் கூறுகின்றார்.
ஆனால் 17ஆண்கடுளாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசக்தி ஆனந்தன் இந்த மக்களிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்தார்.
தனது வீம்பிற்காக தமிழ் மக்களின் அபிவிருத்திற்காக அவர்களின் தொகுதி மக்களிற்கு வரவேண்டிய 02 கோடி ரூபாயை புறக்கனித்துள்ளார்.
இருப்பினும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிதியை பெற்று மக்களின் அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளனர்.
அவ்வாறு மக்களின் பிவிருத்திக்காக இரண்டு கோடி ரூபாயை பெற்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி விமர்சிக்கின்றார்.
குறிப்பாக என்னிடம் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இந்நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களை கேட்டார் நான் 60 இலட்சம் ரூபர்க்கான திட்டங்கள் சிலவற்றை கொடுத்தேன்.
இதற்காக கஜதீபன் 60 இலட்சம் பெற்றார் என ஆனந்தன் சொல்லக்கூடும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….