;
Athirady Tamil News

11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை..!!

0

டெல்லியில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தலைமை தேர்தல் கமி‌ஷன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

தற்போது இதே போன்ற பிரச்சினையை சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் முகம்மது அக்பர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகித்தனர். இதுகுறித்து நான் சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். மேலும் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதினேன்.

தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எனக்கு பதில் கடிதம் அனுப்பியது. அதில் 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில கவர்னர் உரிய பரிந்துரை கடிதம் தர வேண்டும். கவர்னரின் பரிந்துரை இல்லாமல் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நான் கவர்னர் பல்ராம்தாஸ் தாண்டனுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதை ஏற்று இதுவரை கவர்னர் எந்தவித பரிந்துரை கடிதமும் எழுதவில்லை.

ஓராண்டாகியும் இந்த வி‌ஷயத்தில் சத்தீஸ்கர் கவர்னர் தாண்டன் மவுனமாக இருக்கிறார். கவர்னர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் ஜனாதிபதியை காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 எம்.எல்.ஏ.க் கள் உள்ளனர். 49 எம்.எல். ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க் கட்சியான காங்கிரசுக்கு 39 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலை உருவானால் சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*