;
Athirady Tamil News

வாரந்தோறும் தொண்டர்களை சந்தித்து பேச ராகுல் திட்டம்..!!

0

காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள ராகுல்காந்தி தினமும் கட்சிப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்.

தற்போது அவர் வட கிழக்கு மாநிலங்கள் சட்ட சபை தேர்தலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் தனித்தனி குழுக்களை உருவாக்கி உள்ளார்.

இதற்கிடையே 2019-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து வலுவூட்ட ராகுல் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாநில நிர்வாகிகளை சந்திக்க ராகுல் ஏற்பாடு செய்துள்ளார். அகில இந்திய நிர்வாகிகளை துக்ளக் லேனில் உள்ள தனது இல்லத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேச அவர் சம்மதித்துள்ளார்.

மாநில கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதோடு மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து டெல்லி தலைமை அலுவலகத்துக்கு வரும் காங்கிரஸ் தொண்டர்களையும் சந்தித்துப் பேச ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சனிக் கிழமையும் அவர் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

காங்கிரஸ் தொண்டர்களை ராகுல் சந்திக்கும் கூட்டத்துக்கு “ஜனதா தர்பார்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − nine =

*