;
Athirady Tamil News

மம்மிகளின் கள்ளக்காதல்: ஆய்வில் அம்பலமான உண்மை..!!

0

எகிப்தில் உயர்குடியில் பிறந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.

இவை மம்மி என அழைக்கப்படுகிறது, இந்த மம்மிக்களை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள டேர் ரிபே கிராமத்தில் கடந்த 1907ம் ஆண்டு இரு மம்மிகள் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டும் உள்ளூர் ஆளுநரின் மகன்கள் நம்-நக்த், நக்த்-ஆங் என தெரியவந்த நிலையில், சுமார் 3,800 ஆண்டுகளான இந்த மம்மிகள் ஆய்வுக்காக பிரித்தானியாவின் மான்செஸ்டர் பல்கலைக்கழக அருங்காட்சியகத்துக்கு எடுத்து வரப்பட்டன.

இரு மம்மிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா? என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இரு உடல்களிலும் எம்1ஏ1 எனப்படும் மைட்டோகான்டிரியல் ஹேப்லோடைப் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்தன.

இதன்மூலம், இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்பது உறுதியானது.

ஆனால், தந்தை வழியாக வரும் ஒய் குரோமோசோம் மரபணு தொடரில் வேறுபாடுகள் இருந்தன.

இதையடுத்து இருவரும் வேறு, வேறு தந்தைக்கு பிறந்தவர்கள் என அறியப்பட்டது.

இதனால் நம்-நக்த், நக்த்-ஆங் ஆகியோரின் தாய்க்கு கள்ளத்தொடர்பு இருந்திருக்கலாம் என்பது இந்த சோதனையின் மூலம் உலகுக்கு தெரிய வந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*