;
Athirady Tamil News

கர்ப்பமாக இருப்பதாக கூறி பலரை ஏமாற்றிய பெண்: வசமாக சிக்கியது எப்படி?..!!

0

பிரித்தானியாவில் கர்ப்பமாக இருப்பதாகவும், புற்றுநோய் இருப்பதாகவும் பணத்துக்காக பொய்யாக கூறிய பெண்ணுக்கு சிறை தண்டனை எதுவும் விதிக்காமல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நாட்டின் மான்செஸ்டரை சேர்ந்தவர் கிம்மா டால்டன் (29). இவர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு வயிற்று புற்றுநோய் இருப்பதாகவும் பொய்யாக கூறி தொண்டு நிறுவனங்களிடம் பணம் பறிக்க திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி புற்றுநோய் பாதித்தவர் போல தனது முடிகளை குறைத்து கொண்டு தொண்டு நிறுவனங்களின் பேஸ்புக் பக்கத்தில் தனது நிலையை பரிதாபமாக கூறியுள்ளார்.

இதன் மூலம் மம்மி ஸ்டார் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவருடன் டால்டனுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர் மூலம் பலரிடம் நிதி திரட்டி டால்டனுக்கு £1,200-க்கும் அதிகமாக பணம் வழங்கப்பட்டது.

இதோடு உணவகத்தில் சாப்பிட மற்றும் டாக்ஸி சவாரி செய்ய என பல விடயங்களுக்கும் தொண்டு நிறுவனம் மூலம் பணம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் டால்டனின் உடல்நிலை குறித்து அறிய அவரை தொண்டு நிறுவன ஆட்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டால்டன் கர்ப்பமாக இல்லை எனவும், அவருக்கு புற்றுநோய் பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

பணத்துக்காக டால்டன் இது போல ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து அவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − seven =

*