;
Athirady Tamil News

ஊவா மாகாண முதலமைச்சர் கைது : நடந்தது இதுவா.?

0


பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தனது சட்டத்தரணி ஊடாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று சரணடைந்துள்ளதாக, பொலிஸார்குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணியொருவரின் வாயிலாக அவர் இன்றுக் காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண் அதிபரை, மாகாண முதலமைச்சர் முழங்காலிட வைத்த விவகாரம்.. சூடாகும் பதுளை..! (இது எப்படி இருக்கு)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 12 =

*