;
Athirady Tamil News

‘சிறிலங்க பொதுஜன பெரமுன’ வவுனியா வேட்பாளர்கள்- மகிந்தவை சந்தித்தனர்! (படங்கள்)

0


‘சிறிலங்க பொதுஜன பெரமுன’ வவுனியா வேட்பாளர்கள்- மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர்!

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த வவுனியா வேட்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.

வவுனியா நகரசபைக்கான சிறிலங்க பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான வேட்பாளரும், முன்னாள் நகரசபை உறுப்பினரும், வவுனியாவில் பிரபல கணித ஆசிரியருமான எஸ். எஸ்.சுரேன் தலமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் சிறிலங்க பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் வெற்றிபெற்று நகரசபை மற்றும் பிரதேச சபைகளை கைப்பற்றுமாறும் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் கிடைக்கப்பெற்றால் அதன் பின் தன்னால் முடிந்த அபிவிருத்தி பணிகளை செய்து தருவதாகவும் இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றக் கூட்டங்களிலில் மக்களிடம் எந்தவிதமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விளக்கங்களை கொடுத்த முன்னாள் ஜனாதிபதி சிறிலங்க பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் கிராமங்கள் தோறும் துவிச்க்கர வண்டியில் சென்று பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறும் பணித்திருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தனது சார்பாக முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்பதுடன் பிரச்சாரங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் பொதுச் செயலாளரும் இரத்தினபுரி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காராவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*