;
Athirady Tamil News

வவுனியாவில் வீட்டினுள் புகுந்த முதலை; பொதுமக்களால் மடக்கி பிடிப்பு! (படங்கள்)

0


வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகே இன்று (23.01.2018) அதிகாலை 3.30 மணியளவில் வீடோன்றினுள் புகுந்த ஏழு அடி நீழமான முதலையோன்றினை பொதுமக்கள் மடக்கி பிடித்து நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதிகாலை வீட்டில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது ஏழு அடி நீளமான முதலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் அயலவர்களை உதவிக்கு அழைத்து முதலையை கட்டிப்போட்டு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் நிலவும் வரட்சி காரணமாக இவ் முதலைகள் மக்களின் குடியிருப்புக்கள் நோக்கி நகர்வதாகவும் இம் முதலையை வன ஜீவராசிகள் பாதுகாப்பு இலகாவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*