;
Athirady Tamil News

35000 அடி உயரத்தில் இளம்பெண்ணுக்கு பிரசவம்: அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!!

0

பாரிசிலிருந்து நியூயார்க் நோக்கிப் பறந்துகொண்டிருந்த Air France விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த 41 வயது Toyin Ogundipe க்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விமானப் பணிப்பெண்கள் கேட்க, கையை உயர்த்தியபடி எழுந்தவர் ஒரு ஆண் மருத்துவர். அவர் Cleveland Clinik இன் Urological and Kidney Institute இல் பணிபுரியும் ஒரு யூராலஜிஸ்ட், அவர் பெயர் Dr Sij Hemal.

பணிப்பெண்கள் தயங்கியவாறு நிலைமையை விவரிக்க, தனது பயிற்சிக்காலத்தில் ஏழு பெண்களுக்கு பிரசவம் பார்த்த அனுபவம் தந்த நம்பிக்கையில் அவர் உடனடியாக உதவ முன்வந்தார். யார் செய்த புண்ணியமோ அவருக்கு அடுத்த இருக்கையில் இருந்தவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர்.

அந்தப்பெண்ணை எப்படியாவது பத்திரமாக JFK விமான நிலையத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்தால் அதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்களாகும்.

எனவே விமானத்தில் இருந்த சொற்ப மருத்துவக் கருவிகளுடன், குழந்தைகள் நல மருத்துவரின் உதவியுடன் Dr Sij Hemal செயலில் இறங்கினார். 30 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தில் குவா குவா சத்தம் ஒலித்தது.

விமானம் தரையிறங்கியதும் தாயும் சேயும் பத்திரமாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும்படி எனக்குப் பயிற்சி அளித்த Cleveland Clinikகுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று Dr Sij Hemal கூறுகிறார்.

நடுவானில் பிறந்த குழந்தைக்கு அதன் தாய் Jake என்று பெயரிட்டுள்ளார். அமெரிக்கப் பகுதியில் பிறந்ததால் Jakeகுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*