;
Athirady Tamil News

இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய 5 வயது சிறுவன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

0

பிரித்தானியாவில் சகோதரனின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய 5 வயது சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் டோர்செட் கவுண்டியை சேர்ந்தவர் ஷேன், இவருக்கு கேய்டன் பேட்லெட் (5) மற்றும் ஷேன் ஜூனியர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள்.இந்நிலையில் கடந்த 13-ஆம் திகதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது ஷேன் ஜூனியர் கார் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவன் உயிரிழந்தான்.இதையடுத்து ஷேன் ஜூனியர் இறுதி சடங்குக்காக பகுதி மக்கள் £5,000 நிதியை திரட்டினார்கள்.

ஐந்து வயது சிறுவனாக இருந்தாலும் கலங்காமல் தனது சகோதரனின் இறுதி சடங்கை தனது தந்தையுடன் முன்னின்று கேய்டன் நடத்தினான்.

பின்னர் அவன் கூறிய இரங்கல் செய்தியில், ஐ லவ் யூ ஷேன், என்னுள் ஒரு பகுதி பிரிந்து போனது போல உணருகிறேன்.

எப்போதும் நான் உன்னுடன் இருப்பேன் என தெரிவித்துள்ளான். கேய்டன் குடும்பத்தார் கூறுகையில், ஷேன் ஜூனியரை நாங்கள் அதிகம் மிஸ் செய்கிறோம்.

தன்னுடைய பார்ட்னரை கேய்டன் இழந்துவிட்டான் என கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 18 =

*