;
Athirady Tamil News

பொம்மைக்கு பதில் நிஜ மனிதர்கள்: இந்த செய்தி உங்களை அதிர்ச்சியாக்கும்..!! (வீடியோ)

0

கார்கள் விபத்துக்குள்ளானால் என்ன சேதத்தை உண்டுபண்ணும் என்பதை சோதிப்பதற்காக பொம்மைகளுக்குப் பதில் மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியூட்டி வருகின்றன.

ஜேர்மனியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் 1970களில் கார் விபத்துப் பரிசோதனைகளில் மனிதர்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

சில கார்களை ஓட்டுபவர்கள் இன்னொரு கார் மீது மோதுவதும், சிலர் காரை மரத்தின்மீது மோதுவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஒரே நல்ல விஷயம், அவர்களில் ஒருவருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதுதான்.

இந்த வீடியோ முதலாவதாக அக்டோபர் 6, 1985 அன்று Jack Palace தொகுத்தளித்த அமெரிக்காவின் ABC தொலைக்காட்சித் தொடரான “Ripley’s Believe It Or Not” தொடரில் வெளியானது.

வீடியோவின் முற்பகுதியில் 1970கள் மற்றும் 80களில் அமெரிக்காவில் பொம்மைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சோதனைகளும் பிற்பகுதியில் நிஜ மனிதர்களைப் பயன்படுத்தி ஜேர்மனியில் செய்யப்பட்ட சோதனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 15 =

*