;
Athirady Tamil News

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில், மற்றுமொரு வீடும் தீக்கிரை..!

0


மன்னார் – மாந்தை பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட ஒருவரது வீடு நேற்று இரவு தீக்கிரையாகியுள்ளது.

இதனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதோடு, தீக்கான காரணம் மின் கோளாறே எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிலர், நிரந்தர வீடுகளை அமைக்கும் வரை, தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீடுகளில் பாதுகாப்பற்ற வகையில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் வடக்கில் இதுபோன்று விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றது.

இதேவேளை, கடந்த வாரம் முல்லைத்தீவிலும் இதுபோன்றதொரு விபத்து ஏற்பட்டதோடு, அந்த வீடும் முழுமையாக சேதமடைந்தது.

இதுஇவ்வாறு இருக்க, பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொள்ள தங்களுக்கு போதுமான வசதிகள் இல்லை என, தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.

மேலும், தாம் ஒருவாறு முயன்று தரமான முறையில் மின் இணைப்பை பெற்றாலும், இந்த தற்காலிக வீடுகளை விட்டு, நிரந்தர வீட்டுக்கு செல்ல நேரிடுகையில் தமது பணம் விரயமாக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 4 =

*