;
Athirady Tamil News

இலங்கைக்கான புதிய “தூதுவர்கள்” நியமிப்பு..! (படங்கள்)

0


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

சூடான், வியட்நாம், மியன்மார், சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த தூதுவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் தமது நிமயனக் கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.

அதன்படி, சிராஜுதீன் ஹமீட் யூசிப் இலங்கைக்கான சூடான் தூதுவராகவும், ஃபாம் தி பிச் நோஹ் வியட்நாம் தூதுவராகவும், ஹன் தூ மியன்மார் தூதுவராகவும், லீ ஹியான் கொரிய தூதுவராகவும், சொங் ஷயுவான் இலங்கைக்கான சீன தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 7 =

*