;
Athirady Tamil News

வயதான மூதாட்டியை சித்ரவதை செய்த பராமரிப்பாளர்: காட்டிக் கொடுக்க ரகசிய கமெரா..!!

0

கனடாவில் நாள்தோறும் சராசரியாக 6 முதியவர்கள் அவர்களது பராமரிப்பாளர்களால் துன்புறுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

கனடாவின் ஒட்டாவா முதியோர் இல்லத்தில் தனது தாயை கொண்டுபோய் சேர்த்துள்ளார் Diana Pepin என்ற பெண்.

அங்கு தனது தாயாரை சேர்த்த பின்னர் பராமரிப்பாளர்கள் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை அறிவதற்காக ரகசிய கமெராவை செட் செய்தார்.

“Die, die you bitch. You’ve got to die now.தனது தாயை பார்த்து பராமரிப்பாளர்கள் திட்டிய வார்த்தைகள் அவருக்கு அதிர்ச்சியை தந்தன.

அவர் கூறுகையில், எனது தாயால் நடக்கவோ, பேசவோ முடியாது என்றாலும் நடப்பதை புரிந்து கொள்ள முடியும், அவரை தூங்க விடமால் துன்புறுத்தி இருக்கிறார், இது சித்ரவதையாகும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குற்றம்சுமத்தபட்ட பராமரிப்பாளரையும், அவரைப் போன்றே தவறான நடத்தையில் ஈடுபட்ட மேலும் இருவரையும் பணியைவிட்டு நீக்கிவிட்டதாக Ontario’s long-term care சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப்போன்று சிலவருடமாகவே CBC Marketplace investigation எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் செவிலியர்கள் முதியோர்களை சித்திரவதை செய்யும் போக்கு 148% அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவை வெளியிட்டது.

2016ம் ஆண்டு 2,198 சித்திரவதை நிகழ்வுகள் Ontario பகுதியில் நடந்துள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 முதியோர்கள் செவிலியர்களால் பாதிப்புக்கு ஆட்படுகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*