;
Athirady Tamil News

ஏறாவூர் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்கமறியல்..!

0


ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (23) சரணடைந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான எச்.எம். அலிமுஹம்மது (வயது 60), ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பொலிஸார், ஆஜர்படுத்திய போது, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சந்தேக நபரை பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கற்கும் சிறுவனான மாணவன், குறித்த ஆசிரியரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியிருந்தாரெனக் குறிப்பிடப்படுகிறது.

மாணவன் துஷ்பிரயோக சம்பவம்; ஏறாவூரில் தலைமறைவாகியிருந்த ஆசிரியர் பொலிஸில் ஆஜர்!!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*