;
Athirady Tamil News

ரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தம்..! (VIDEO)

0

ரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டது

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் காத்தான்குடியில் நடைபெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கூட்டமொன்று மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு – காத்தான்குடியில் இடம்பெற்றது.

இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் இரவு 11 மணியைக் கடந்தும் இடம்பெற்று வருவதாக இரவு 11.05 க்கு மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ஆராயுமாறு காத்தான்குடி பொலிஸாரை மட்டக்களப்பு உதவித்தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரசாரக்கூட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற பொலிஸார் கூட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் 10 நிமிடத்தில் கூட்டத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 11.30 மணியைக் கடந்தும் பிரசாரக்கூட்டம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் குறித்த பகுதிக்கு சென்று கூட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கூட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − fourteen =

*