;
Athirady Tamil News

இலங்கை வந்துள்ள, சிங்கப்பூர் பிரதமருக்கு அரச மரியாதை..! (முழுமையான படங்கள்)

0


சிங்கப்பூர் பிரதமருக்கு அரச மரியாதை

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அவர்கள் வரவேற்கப்பட்டதன் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும், சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோரும் இதில் கைச்சாத்திட்டனர்.

தொழிற்பயிற்சி, புதிய தொழில் வாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதி போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வாய்ப்பு வழங்குகிறது.

இதேவேளை, சுகாதாரம், சுற்றுலா, இணைய வழி வர்த்தகம், மின்சக்தி ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கி இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடினர்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*