;
Athirady Tamil News

(PHOTOS) வில்பத்து தேசிய வனப்பூங்காவின் அபிவிருத்தி, இயற்கை பாதுகாத்தல் விழிப்புணர்வு!!

0


வில்பத்து தேசிய வனந்தரபிரதேசம் மற்றும் வனாந்தர பரிபாலனம் இயற்கை வளஅபிவிருத்தி தொடர்பாக சுற்றுலாத்துறை மற்றும் வன அபிவிருத்தியினை மையமாகக் கொண்டு செயற்படும் MID இன் தலைவர் துஷயந்தன் அவர்களினது வனாந்தர பாதுகாப்பு மற்றும் இயற்கை பாதுகாத்தல் விழிப்புணர்வு.

வில்பத்து 1938 தேசிய பூங்காவாக திறக்கப்பட்டது.


இலங்கையில் மிக உயர்வரப்பிரசாதமாக வனங்கள் காணப்படுகின்றன. இதனை பாதுகாக்க வேண்டியது நாட்டிலுள்ள மக்களது கடமையும் பொறுப்புமாகும்.

மிக பெரியளவிலான வருமானத்தினையும் குறிப்பாக அனுராதபுர, நொச்சியாகம, புத்தளம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் காணப்படுகின்றது.

வில்பத்தினை பார்வையிட செல்லும் பாதையினை இலகுவாக இணையத்தின் google maps உதவியுடன் அறிந்து கொள்ளமுடிவதுடன் பார்வையிடும் நேரமாக காலை6மணிதொடக்கம் மாலை6 மணிவரையாகும்.தேசிய பூங்காவிற்குள் செல்பவர்களுக்கான பயணவண்டிகள் பிரதேசத்தில் காணப்படும்.

வெளிநாட்டவர் உள்நாட்டவர் என்ற ரீதியில் கட்டணங்கள் அறவிடப்படும்(இது தனிப்பட்ட உரிமையாளரது வாகளனங்களுக்கு) சுமார் 10பேர் வரை இலகுவாக வனத்தினை பாதுகாப்புடன் சுற்றிபார்வையிடுவதற்கான வசதிகள் காணப்படுகின்றது. யானை, கரடி, மான், முதலை, ஊர்வன மற்றும் பறவையினங்களையும் பார்வையிட முடியும்.

பார்வையிடுவதற்கான முறைகளுக்கமைய பார்வையிடல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மிக உகந்தகாலமாக வனப்பாதுகாப்பு ஒழுங்கமைப்பு குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தப்பட்டு காணப்படுவதுடன் மக்கள் இவ் வனத்தினை பாதுகாத்து தங்கள் வாழ்வாதாரத்தினை சுற்றுலாத்துறையின் Sri Lanka Forestry Institute இன் உதவியுடன் பயிற்சி பெற்று வளர்த்துக் கொள்ள முடியும்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 15 =

*