;
Athirady Tamil News

விவாதத் திக­தியை தீர்­மா­னிக்கும் கட்சி தலைவர் கூட்டம் இன்று..!!

0

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை எப்­போது விவா­தத்­திற்கு எடுக்­கப்­படும் என்­பதை ஆராய மீண்டும் இன்று கட்சித் தலை­வர்கள் கூட்டம் பார­ளு­மன்­றத்தில் கூடு­கின்­றது. அறிக்­கையை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் இறு­வட்டின் மூலம் வழங்­கவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு ஊழல் விவ­காரம் குறித்து ஜனா­தி­பதி ஆணைக்­குழு தயா­ரித்த அறிக்கை பார­ாளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும் அறிக்கை இன்னும் விவா­தத்­திற்கு எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை குறித்த விவாதம் எப்­போது நடத்­தப்­ப­டு­வது என்ற உறு­தி­யான திக­தி­யொன்றை தீர்­மா­னிக்கும் வகையில் கட்சித் தலை­வர்கள் கூட்டம் இன்று கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் கூடும் இந்தக் கூட்­டத்தில் தேர்­தலின் பின்னர் விவா­திக்கும் சாத்­தி­யப்­பா­டுகள் குறித்தும் ஆரா­யப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை முழு­மை­யாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும் அறிக்கை நான்கு பாகங்­க­ளாக பிரிக்­கப்­பட்டு தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இதில் சில பக்­கங்­களை காண­வில்லை எனவும், உண்­மைகள் மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் சகல பார­ாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பிணை­முறி அறிக்­கை­யினை இறு­வட்டில் பதி­வேற்றி அதன் மூல­மாக வழங்­கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தெரிவிக்கப்படும் என்பது அமைச்சர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 19 =

*