;
Athirady Tamil News

புங்குடுதீவில் இன்றுகாலை, கடற்படை வாகனம் மோதி சிறுமி பலி, ஒருவர் காயம்..! (படங்கள்)

0


புங்குடுதீவில் இன்றுகாலை, கடற்படை வாகனம் மோதி சிறுமி பலி, ஒருவர் காயம்..! (படங்கள்)

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் கடற்படையின் பவல் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று(24) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி புங்குடுதீவு பகுதியினை சேர்ந்த திருவானந்தன் கேசனா வயது(09) என பொலிஸார் கூறினர். உயிரிழந்த இந்த சிறுமி தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன் போது எதிர்திசையில் வந்த கடற்படையின் வாகனம் மோதியுள்ளது. சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மாமன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40வயதுடைய சபேஸ்வரன் என்ற மாமன் முறையிலான உறவினர் காயமடைந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − three =

*