;
Athirady Tamil News

கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் வழங்கிவைப்பு

தாயகத்தில் ஏராளமானோர் சுத்தமில்லாத குடி நீரை அருந்துவதால் சிறுநீரக நோய்க்கு உள்ளாகி அவதியுற்று இறக்கும் நிலை பெருகி வருகின்றது. இந்நிலையில் தாயகத்தில் யுத்தத்தின் வடுக்களைச்சுமந்தும் நோய்களின் தாக்கங்களினாலும் துன்பங்களைச்சந்தித்து வரும் தாயக உறவுகளுக்கு உயிர்காக்கவும் உதவிக்கரம் நீட்டுவதிலும் கனடா செந்தில்குமரன் அவர்களின் நிவாரண நிதியமும் கனடா வாழ் உறவுகளும் பெரும்பங்கை ஆற்றிவரும் நிலையில் நேற்று முன் தினம் பூநகரிப்பிரதேசத்தின் கிளி/முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வு பாடசாலைமுதல்வர் திரு பத்மநாதன் ஆனந்தராசா தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.

இதன் போது பாடசாலை முதல்வர் கருத்து தெரிவிக்கையில் தமது வாழ் நாள் இந்நிகழ்வின் வாயிலாக 10 வருடங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த உதவிக்காக பல வருடங்கள் காத்திருந்ததாகவும் மன நெகிழ்ச்சியுடன் கூறி செந்தில் குமரன் அவர்களுக்கும் கனடா Ralhan Dentistry நிறுவனத்திற்கும் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

பிரதம அதிதியாக கனடா செந்தில் குமரன் அவர்கள் கலந்து கொண்டு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கையளித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தமக்கு வடகிழக்குப்பிரதேசங்களில் இருந்து சிறுநீரக சிகிச்சைக்காக நிதி உதவி வேண்டி பல கோரிக்கைகள் வந்ததையிட்டு தான் இந்த முடிவை எடுத்ததாகவும் இதன்மூலம் எமது எதிர்கால சந்ததியினரை நோய்களிலிருந்து பாதுகாக்கமுடியுமென நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இச்செயற்திட்டம் வன்னிப்பெருநிலப்பரப்பில் சுத்தமான தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இதர பாடசாலைகளுக்கும் எடுத்துச்செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த முதலாவது திட்டத்தின் பிரகாரம் 1000ற்கு மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*