;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழக கணித விஞ்ஞான வினா விடைப் போட்டி அறிவியல் நகரில்..!! (படங்கள்)

0

E week ஐ முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியற் பீட மாணவர்கள் நடாத்திய தமிழ்மொழி கணித விஞ்ஞான வினா விடைப் போட்டி (Q-fiesta ) இன் முதலாம் இரண்டாம் கட்ட வினாவிடைப் போட்டியானது வவுனியா,மன்னார்,திருகோணமலை,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்தது.

யாழ் பல்கலைக்கழகம் கிளிநொச்சி வளாகத்தில் நிகழும் இறுதிக்கட்டப் போட்டிக்கு திருகோணமலையிலிருந்து ஶ்ரீ கோணேஸ்வரா இந்தக் கல்லூரியும் ஶ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரியும் மன்னாரிலிருந்து சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியும் புனித சவேரியர் பெண்கள் தேசிய பாடசாலையும் முல்லைத்தீவிலிருந்து குமுழமுனை மகா வித்தியாலமும் யோகபுரம் மகா வித்தியாலமும் வவுனியாவிலிருந்து தமிழ் மத்திய மகா வித்தியாலமும் ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயமும் யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் இந்துக் கல்லூரியும் யாழ் ஹாட்லிக் கல்லூரியும் கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயமும் சென் தெரேசா பெண்கள் கல்லூரியும் தெரிவாகியுள்ளன. இறுதிக்கட்ட போட்டியானது எதிர்வரும் 27.01.2018 சனிக்கிழமை நடாத்தப்படவுள்ளது. என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 14 =

*