;
Athirady Tamil News

தண்டனைக்கு எதிரான பேரறிவாளன் மனு மீது விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!! (வீடியோ)

0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, மத்திய அரசிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசோ இதற்கு மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் கடிதம் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்கும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சில தகவல்கள் விடுபட்டிருப்பதால் தண்டனையை ரத்து செய்ய கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், வாக்குமூலத்தில் முக்கிய தகவல்களை விசாரணை அதிகாரி பதிவு செய்யாத காரணத்தினால், கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் தன்னையும் இதர 6 பேரையும் குற்றவாளி என 1999-ல் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்பை திரும்ப பெறவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, சி.பி.ஐ.கோர்ட் முன்னர் பேரறிவாளனுக்கு விதித்த தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளதாக பேரறிவாளனின் வக்கீல் சங்கரநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 4 =

*