ஸ்ரீநகர்: தால் ஏரியை சுத்தப்படுத்தும் 5 வயது சிறுமி..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியானது மிகவும் புகழ்பெற்றது. இதன் அழகை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் தற்சமயம் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளால் இந்த ஏரி அழகு இழந்து காணப்படுகிறது. இந்த ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் 1980-லிருந்து மத்திய மற்றும் மாநில அரசு ஈடுபட்டு வருகின்றன. அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளன. ஆனால் ஏரி சுத்தமடையவில்லை.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஜன்னத் என்ற 5 வயது சிறுமி ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறாள். அவள் தந்தையின் வழிகாட்டுதலின் படி சுத்தப்படுத்தி வருவதாக கூறினார்.
இது குறித்து பேசிய ஜன்னத், ‘தால் ஏரியில் அதிகப்படியான குப்பைகள் உள்ளன. நான் என்னை போன்ற குழந்தைகளை படகில் இருந்து கொண்டு குப்பைகளை சுத்தம் செய்யும் மாறு கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் அழகான ஏரி. அதனை அனைவரும் அசுத்தம் செய்கின்றனர். நகரில் உள்ள அனைவரும் என்னுடன் இணைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்’ என கூறினாள்.
சிறுமியின் இந்த செயல் அனைவரையும் வியக்க வைக்கிறது. ஏரியை சுத்தப்படுத்தும் அவளது முயற்சிக்கு பலர் ஆதரவும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.