;
Athirady Tamil News

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் டாக்டர் பலி..!!

0

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுப். டாக்டர். இவரது மனைவி துசாரா (வயது 38). ஆயுர்வேத டாக்டர். இவர்களுக்கு வைதேகி, வைஷ்ணவி என்ற 2 மகள்கள் உள்ளனர். அனுப் குடும்பத்துடன் பத்தனம்திட்டா அருகே உள்ள கூடல் என்று ஊருக்கு சென்றார்.

அங்கு உறவினர்களை பார்த்து விட்டு துசாரா இரு மகள்களை அழைத்துக்கொண்டு ரெயிலில் கோட்டயத்தில் இருந்து கண்ணூருக்கு புறப்பட்டார். இரவு நேரம் என்பதால் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

அதிகாலை வைஷ்ணவி எழுந்து பார்த்தபோது தாயை காணவில்லை. கழிவறை மற்றும் பல இடங்களில் தேடியும் தாயை காணவில்லை. அதிர்ச்சியடைந்த மகள்கள் இது குறித்து சொர்ணூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அருகில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் தண்டவாளப்பகுதியில் தேடினர். அப்போது வந்த வழியில் சிறிது தூரத்தில் பெண் டாக்டர் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சொர்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பெண் டாக்டர் தூக்க கலக்கத்தில் கழிவறை கதவுக்கு பதிலாக காம்பார்ட்மெண்ட் பெட்டியின் மெயின் கதவை திறந்திருக்கலாம். அப்போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + twenty =

*