;
Athirady Tamil News

தெலுங்கானா ராஷ்டிரிய கட்சி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: காங். கடிதம்..!!

0

டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 20 பேர் இரட்டை ஆதாய பதவி வகிப்பதாக ஜனாதிபதி, தேர்தல் கமி‌ஷனுக்கு புகார் அனுப்பப்பட்டு இதை விசாரித்த தேர்தல் கமி‌ஷன் 20 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. இதை ஏற்று ஜனாதிபதி ஆம்ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் 9 எம்.எல்.ஏ.க்கள் மீது இரட்டை ஆதாய பதவி புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரவந்த் ரெட்டி, ஜனாதிபதி, தலைமை தேர்தல் கமி‌ஷன், மாநில தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

அதில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.க் கள் விநாயக பாஸ்கர் (வாரங்கல் மேற்கு), ஜெலகம் வெங்கட் ராவ் (கோதகுடேம்) ஆகியோர் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சட்டசபை செயலாளர்களாக பதவி வகிக்கிறார்கள். சீனிவாஸ் கவுத் (மெகபூப்நகர்), கிஷோர் குமார் (துன்கதுருத்தி) துணை முதல்வர் அலுவலகத்தில் பதவி வகிக்கிறார்கள்.

இதே போல எம்.எல்.ஏ.க் கள் சதீஷ்குமார், கோலா லட்சுமி, ராசமயி பாலகி‌ஷன், சோமராத சத்யநாராயணா, பிரசாந்த் ரெட்டி ஆகியோரும் இரட்டை ஆதாய பதவி வகிப்பதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 14 =

*