;
Athirady Tamil News

சூலூர் அருகே ஓடும் ரெயில் முன்பு செல்பி எடுத்த கல்லூரி மாணவர் பலி..!!

0

கோவை சூலூர் அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சுஜித் (வயது 18). இவரது நண்பர் பல்லடத்தை சேர்ந்த மயில்சாமி என்பவரது மகன் சதீஷ்குமார் (18). இவர்கள் 2 பேரும் நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் செல்பி எடுப்பதற்காக சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அங்கு 2 பேரும் தங்களை வித்யாசமான முறையில் செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு ரெயில் வந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த 2 பேரும் சரக்கு ரெயில் முன்பு ‘செல்பி’ எடுக்க முயன்றனர். கண்இமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த ரெயில் மாணவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சுஜித் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுஜித் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போத்தனூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஏசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + two =

*