;
Athirady Tamil News

தவறாக நடக்க முயன்ற வாலிபரிடம் இருந்து பெங்களூரு பெண்ணை காப்பாற்றிய நாய்..!!

0

பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பெங்களூரு மையப் பகுதியில் வசித்து வரும் நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது தனியார் இணையத்தள உணவு நிறுவனம் மூலம் உணவுக்காக ஆர்டர் கொடுத்து இருந்தேன். அப்போது விக்னேஷ் என்ற வாலிபர் உணவை கொண்டு வந்தார்.

நான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து உணவு பொட்டலத்தை வாங்க முயன்ற போது அந்த வாலிபர் என்னிடம் பேச்சு கொடுத்தார். நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்களா என்று கேட்டார். பின்னர் அவர் அசிங்கமான வார்த்தைகளை கூறி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அப்போது ஒரு நாய் அவரை பார்த்து குரைத்தது. அந்த நாய் குரைப்பதை பார்த்து அவர் உணவு பொட்டலத்தை என்னிடம் கொடுத்து விட்டு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.

நான் அந்த நாய்க்கு வழக்கமாக உணவு போடுவேன். அந்த விசுவாசத்தில் எனக்கு ஆபத்து ஏற்பட்ட போது அந்த நாய் என்னை காப்பாற்றி விட்டது. அந்த நாய் இல்லையென்றால் எனக்கு பாலியல் கொடுமை நடந்து இருக்கும்.

இது குறித்து அந்த தனியார் உணவு நிறுவனத்தில் தகவல் சொல்லி விட்டேன். போலீசிலும் புகார் செய்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சமூக வலைத்தளத்தில் இந்த செய்தியை பதிவிடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

அந்த பெண் புகாரைத் தொடர்ந்து தனியார் உணவு நிறுவனம் தனது ஊழியர் விக்னேஷை பணியில் இருந்து விடுவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*