;
Athirady Tamil News

தமிழீழத்தை உருவாக்குவதே இந்த தேர்தல் என மஹிந்த பொய்யுரைக்கின்றார்: சத்தியலிங்கம்..!!

0

தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இது தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை கொடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பென பொய்யுரைக்கின்றார் என மாகாண சபை உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈச்சங்குளம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மங்களநாதனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்த தேர்தலானது கிரமங்களிலுள்ள மக்களின் அடிப்படை தேவைகளை இனங்கண்டு அவற்றை சீர்செய்வதற்காக பிரதிநிதிகளை கிராமங்களிலிருந்து தெரிவு செய்வதற்கான தேர்தலாகும். எனினும் வடக்கிலும் தெற்கிலும் இந்த தேர்தலானது வேறு அர்த்தத்துடன் சில கட்சிகளால் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

வடக்கில் மாற்றுத்தலைமைக்காக போட்டியிடுவோர் தமிழ் தலைமையை மாற்றும் தேர்தலாகவும், கடந்த 70 வருடங்களாக தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நிராகரிக்கும் தேர்தலாகவும் இதை பயன்படுத்த வேண்டுமென பிரசாரம் செய்கின்றார்கள்.
அதுமட்டமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு அரசியல் முகவரியைப் பெற்று அதில் 15 வருடங்கள் சவாரி செய்து 30 நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு என்ன செய்தது என்றும் கேள்வி கேட்கிறார்கள். இதே கேள்வியை நீங்கள் உங்களிடமே கேளுங்கள். ஏன் மக்களிடம் கேட்கின்றீர்கள். உங்களுக்கு தெரியாதா நீங்கள் என்ன செய்தீர்களென்று. தமிழ் மக்களுக்கு புதிய தலைமை தேடும் இவர்கள் அந்த தலைவரின் கடந்தகாலங்களை மறந்து விட்டார்கள்போலும்.

2008ஆம் ஆண்டு இறுதியுத்தம் கோரத்தாண்டவம் ஆடியபோது இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றியவேளை விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தமொன்றைக் கோரியிருந்தார்கள். அந்தவேளை சுயாதீன தொலைக்காட்சியில் தோன்றிய இவர்கள் அடையாளங் கண்டுள்ள புதிய தலைவர் அரசாங்கத்திற்கு அறிவுரை சொல்கிறார் புலிகள் களைத்துவிட்டார்கள், அவர்களுக்கு ஆறுதல் கொடுத்தால் மீண்டும் உங்களைத்தாக்குவார்கள், தொடர்ந்தும் முன்னேறுங்கள், புலிகளை இலகுவில் அழித்தவிடலாமென்று. இவர்தான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கபோகிறாரா?

30 வருடங்களாக நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தினாலும், 2009இல் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போதும் உயிர், உடமை, பொருள் என அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு யுத்தம் முடிவடைந்த பின்னர் அனைத்தையும் வழங்குவதற்கு கூட்டமைப்பு என்ன அரசாங்கமா? தமிழ் மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகள், பொருளாதா பிரச்சனைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைகள், சிறையில் வாடுபவர்களின் பிரச்சனைகளென பல பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் எவ்வாறு தீர்த்து வைக்க முடியும். 15 வருடங்களாக ஒன்றாக இருந்த இவர்களுக்கு இதுதெரியாதா?

இறுதி யுத்தத்தின்போது இலங்கை படைகளால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான வன்முறைகளை ஐநா சபையில் உலக நாட்களின் அதரவுடன் நிறைவேற்றுவதற்கு உந்து சக்தியாக கூட்டமைப்பு செய்றபடவில்லையா?. இதனை முறியடிப்பதற்காக அப்போதைய மகிந்த அரசு பலகோடி பணத்தை செலவழித்து உலகநாடுகளை தன்பக்கம் இழுக்க பிரச்சாரங்களை செய்தார்கள். அவற்றை முறியடிக்க தமிழர் தரப்பில் பணம் இருந்ததா? இல்லையே கூட்டமைப்பின் இராஜதந்திர நகர்வுகளே இன்று சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு வித்திட்டிருக்கின்றது” என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 4 =

*