;
Athirady Tamil News

ஏறாவூரில்: மாணவன் துஷ்பிரயோகம்: தலைமறைவான ஆசிரியர் பொலிஸில் சரண்..!!

0

ஏறாவூரில் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவனை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியரால் மாணவன் பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*