;
Athirady Tamil News

வவுனியாவில் இளைஞர்கள் உயிரிழந்த கார் விபத்துக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு..!! (படங்கள்)

0

வவுனியாவில் இரு இளஞர்கள் உயிரிழந்த கார் விபத்துக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு!!

வவுனியாவில் இரண்டு இளைஞர்களை பலி கொண்ட கார் விபத்திற்கு காரணமானவர்கள் மீது பொலிசர்; வழக்கு பதியாமல் குற்றவாழியை தப்ப விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் 14-01-2018 அன்று இடம் பெற்ற கார் விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகியிருந்ததுடன் காரில் பயணித்த இருவர் தப்பித்து ஓடிய நிலையில் மறுதினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.

இக் கார் விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் வழக்கு பதிவு செய்யாததுடன் சந்தேக நபர்களை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் விடுதலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

கார் விபத்து இடம்பெற்றபோது காயம் பட்டவர்களையும், மரிணத்தவரையும் மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்.

கார் விபத்துக்குள்ளான நிலையில் காரை செலுத்தி வந்த நபர் மற்றும் தப்பியோடியவர்களை பொலிசாரிடம் அடையாளம் காட்டியிருந்தோம்.

அத்துடன் வடமாகாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்த நிலையிலும் குற்றவாளிகள் தப்பவிடப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய காப்புறுதி பணத்தை கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eight =

*