;
Athirady Tamil News

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை – முன்னாள் வ. மா. பா. உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம்..!!

0

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை – முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம்.

வடமாகாண முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.

24.01.2018 வவுனியா மாகாறம்பைக்குளத்தில் முன்னாள் அதிபர் இராசலிங்கம் தலைமையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபை வேட்பாளர்களான த.யோகராஜா, ச.சந்திரசேகரன் ஆகியோரின் தேர்தல் அலுவலகம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றும் போது,

கடந்த சில நாட்களாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கோடிக்கனக்கான ரூபாய்கள் அரசிடம் அரசியல் இலஞ்சம் பெற்றிருப்பதாகவும், கொள்கை ரீதியாக எமது கட்சி தேசியக்கட்சிகளிடம் சோரம் போய்விட்டது என்ற குற்றச்சாட்டை தொடர்சியாக சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ளார்.

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டிய விடயத்திற்கு நான் பதில் அளிப்பது பொருத்தமானதாக இருக்காது என்றாலும் கூட நான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இன்னால் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து செயற்படுவன் என்ற ரீதியில் கூறுகின்றேன். சிவசக்தி ஆனந்தனுடன் போராட்ட காலத்தில் 35 வருடங்களாகவும் அரசியலில் 18 வருடங்களாகவும் ஒன்றாக பயணித்திருக்கிறோம்.

ஆவ்வாறிருக்க இந்த விடயத்தில் அவர் ஏன் ஒரு முதிர்ச்சி இல்லாத சின்ன பைன் போல் செற்படுன்றார் என தெரியவில்லை. அபிவிருத்தி விடயங்களிற்காக அளிக்கப்படுகின்ற நிதிகள் அரசியல் இலஞ்சமாக பார்க்கப்படும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே இங்குள்ள மக்கள் அபிவிருத்தி விடயங்களிலே புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டுவது வழமை.

அத்தோடு எம் மக்களின் அபிவிருத்திக்காக கட்டங்கள், வீதிகள் போன்ற தேவைகளை பாராளுமன்றத்தில் தெரிவித்து அதற்கான நிதியை பெறுவதை இலஞ்சமென நாங்களே கூறுவோம் என்றால் அது என்ன அர்த்தத்தில் என்று தெரியவில்லை. கடந்த வருடம் குன்றும் குழியுமாக இருந்த மாகாறம்பைக்குளம் பாடசாலை வீதியினை செப்பனிடுவதற்கான கோரிக்கை செல்வம் அடைக்கலநாதனிடம் கிராம அபிவிருத்தி சங்கம், சன சமூக நிலையத்தால் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி இவ்வீதி தொடர்பாக பாராளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதனால் சுட்டிக்காட்டப்பட்டு 60 இலட்சம் ரூபாய் விசேட நிதி பெற்று செப்பனிடப்பட்டது. இவ்வீதியை அரசியல் இலஞ்சம் பெற்றுத்தான் செய்யப்பட்டது என்றால் மீண்டும் அவ்வீதியை குன்றும் குழியுமாகத்தான் கொண்டு வர வேண்டும். இதேபோல்தான் சிவசக்தி ஆனந்தன் விசேட நிதி பெற்று வைரவபுளியங்குளம் வீதியை செப்பனிட்டார்.

அவ்வாறு எனின் இந்நிதியும் அரசியல் இலஞ்சம்தான். இது எவ்வாறு எனின் நீங்கள் செய்தால் அபிவிருத்தி நாங்கள் செய்தால் இலஞ்சமா. தற்போது ஆனந்தன் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டை செய்வதை ஜீரனிக்க முடியாது. இதேபோன்றே கடந்த காலங்களில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் 04 கோடி ரூபாய் நிதியினை பெற்று அபிவிருத்தி வேலைகளை செய்தார். இதை அவர்களின் பார்வையில் சொல்வதானால் 04 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுமக்களிற்கு செய்தார். இதனை வடமாகாண முதலமைச்சர் தனக்கு தெரியாமல் தனது மாகாணத்தில் மத்திய அரசாங்கம் மாகாணசபைக்கு தெரியாமல் எவ்வாறு நிதியினை ஒதுக்கலாம் என்று கேட்டிருந்தார்.

முதலமைச்சரே எங்களிற்கு எதிராக நிற்கின்றார். முதலமைச்சர் கூட்டமைப்பின் முலம் இப்பதவியை பெற்றுவிட்டு தற்போது கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு இருப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

முதலமைச்சர் விடுதலைக்காக போராடிய இயக்கங்களை வன்முறையாளர்கள் தீண்டத்தகாதவர்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது என்று கூறினாரோ அன்றிலிருந்து நான் ஒரு விடுதலைப்போராட்ட இயக்கத்தை சேர்ந்தவன் என்ற ரீதியில் அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அவருடைய கட்சியான சிறீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்கின்றார். ஆனால் மைத்திரிபால சிறி சேனவை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த கூடுதலானவர்கள்.

ஆனால் ஜனாதிபதி தனது கட்சிக்காக முழுமையான விசுவாசத்துடன் செயற்படுகின்றார். அதேபோல் பிரதமர் மற்றும் மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தங்களது கட்சிக்காகதான் பிரச்சாரம் செய்கின்றார்கள். அது கூட்டு அரசாங்கமாக இருந்தாலும் கூட தங்களது கட்சிக்காகதான் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் வடக்கில் மாத்திரம்தான் விசித்திரம், எங்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் நியமித்த முதலமைச்சர் ஏறி வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வீடு தேவை தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு முதலமைச்சர் காட்டும் தயக்கம் அதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 8 =

*