;
Athirady Tamil News

‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 29-ந்தேதி விசாரணை..!!

0

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி உள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது. இந்த படத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் அவற்றை தள்ளுபடி செய்த நீதிபதிகள், படத்தை வெளியிட தடையில்லை என அறிவித்தனர்.

இந்த நிலையில் ‘பத்மாவத்’ படத்தில் இடம்பெற்று இருக்கும் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வேண்டும் எனக்கூறி மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கோர்ட்டில் ஆஜரான வக்கீல் மனோகர் லால் சர்மா, இந்த விவகாரம் மிக மிக சிக்கலான பிரச்சினை எனக்கூறியதுடன், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கு 29-ந்தேதி சாதாரண முறையிலேயே விசாரிக்கப்படும் எனக்கூறி ஒத்திவைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 5 =

*