;
Athirady Tamil News

காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

0

காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரின் கன்டிசால்-டங்போரா கிராமங்களுக்கு இடையே உள்ள புறவழிச்சாலை மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். மேலும் இந்த சாலையில் பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு அவ்வப்போது நடக்கும்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கன்டிசால்-டங்போரா புறவழிச்சாலையில் பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சாலையின் ஓரமாக ‘பிரஷர் குக்கர்’ ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது பாதுகாப்பு படை வீரர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள் அதன் அருகில் சென்று சோதனை செய்தனர். அப்போது அதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் சாலையின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி சாலையை மூடினர். பின்னர் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் பிரஷர் குக்கரை கைப்பற்றி அதில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்தனர். ஒருவேளை இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து செயல் இழக்க செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

காஷ்மீரில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், அங்கு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 9 =

*