;
Athirady Tamil News

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்கை மீது பெப்­ர­வரி மாதம் 20 ,21 இல் விவாதம்..!!

0

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களின் மீதான விவா­தத்தை பெப்­ர­வரி மாதம் 20,21 ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்கு கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கையின் பக்கம் குறை­வ­டைந்­தமை தொடர்­பாக ஏற்­பட்ட சிக்கல் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்சி தலை­வர்­களை பிரத்­தி­யே­க­மாக சந்­தித்து அறி­வு­றுத்­துவார் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கட்சி தலைவர் கூட்­டத்தில் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையும் முன்­னைய ஆட்­சியின் போது அரச நிறு­வ­னங்­களின் ஊழல் மோசடி தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணை­கு­ழுவின் அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் இந்த இரு அறிக்­கைகள் மீதான விவா­தத்தை எப்­போது நடத்­து­வது என்­பது தொடர்பில் சிக்கல் நிலை காணப்­பட்­டது. இந்­நி­லையில் குறித்த இரு அறிக்­கை­களை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வது தொடர்பில் நேற்று கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இதன்­படி இந்த அறிக்­கைகள் மீதான விவா­தத்தை பெப்­ர­வரி மாதம் 20 ,21 ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்கு கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. இதன்­படி இரு தினங்­க­ளிலும் பிற்­பகல் 1 மணி தொடக்கம் 6 மணி வரை விவா­திப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­திற்கு ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பூரண அறிக்கை சமர்ப்­பிக்­காமை தொடர்­பாக எழுந்த சர்ச்சை குறித்தும் 6000 பக்­கங்­க­ளுக்கு மேல் பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இருப்­ப­தாக பொதுக்­கூட்­டத்தில் ஜனா­தி­பதி தெரி­வித்த கருத்து தொடர்­பிலும் கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது.

இதன்­படி இந்த விடயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் செய­லா­ளரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அழைத்து கட்சி தலை­வர்கள் முன் விசா­ரிக்க வேண்டும் என பாரா­ளு­மன்­றத்தில் கூட்டு எதிர்க்­கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் நேற்று (இன்று)கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. எனினும் கட்சி தலைவர் கூட்­டத்­திற்கு ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமூ­க­ம­ளிக்­க­வில்லை.

எனினும் பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணை­கு­ழுவின் அறிக்­கையின் பக்­கங்கள் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்சி தலை­வர்­களை பிரத்­தி­யே­க­மாக சந்­தித்து தெளி­வுப்­ப­டுத்­து­வ­தாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சபா­நா­ய­க­ருக்கு அறி­வித்­துள்ளார். இதன்படி ஜனாதிபதியின் செயலாளரின் தகவலை சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தின் புதிய ஒழுக்கங்கள் மற்றும் நிலையியற் கட்டளை மறுசீரமைப்பு தொடர்பில் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 2 =

*