;
Athirady Tamil News

அட்டன் நகரில் 31ஆம் ­தி­கதி மாபெரும் ஆர்ப்­பாட்டம்…!!

0

பதுளை மகளிர் கல்­லூ­ரியின் பெண் அதி­பரை முழந்­தா­ளிடச் செய்­த­மைக்கு எதி­ரா­கவும் அதற்கு கார­ண­மான ஊவா மாகாண முத­ல­மைச்சர் உள்­ளிட்ட அதி­கா­ரி­களை உட­ன­டி­யாக பதவி நீக்கி சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வலி­யு­றுத்­தியும் எதிர்­வரும் 31ஆம் திகதி புதன்­கி­ழமை அட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்­பாட்­டத்­தினை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அமைச்சர் பழனி திகாம்­பரம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களா தில­கராஜ், வடிவேல் சுரேஸ் ஆகியோர் கூட்­டாக அறித்­துள்­ளனர்.

அர­சியல் பேத­மின்றி அரச ஊழி­ய­ருக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு எதி­ராக அனைத்து தரப்­பி­னரும் அணி­தி­ரள வேண்­டு­மென்று அவர்கள் அழைப்பு விடுத்­துள்­ள­தோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யாக ஊவா முத­ல­மைச்சர் சாமர சம்­பத்தை பத­வி­நீக்கம் செய்­ய­வேண்டும் என்றும் கோரினர்.

அத்­துடன் ஊவா­மா­காண கல்வி அமைச்­சினை கீரி­யி­ட­மி­ருந்து மீளப்­பெற்று நரி­யிடம் வழங்­கி­யுள்­ள­தாக அதி­ருப்­பதி வெளி­யிட்ட அவர்கள், உட­ன­டி­யாக மாகாண கல்வி அமைச்­சினை மீளப்­பெ­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து எடுப்­பதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனக்கு வாக்­க­ளித்த மலைய மக்­க­ளுக்கு செய்யும் பிர­தான பிர­தி­யு­ப­காரம் எனவும் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு மூன்று மக்கள் பிர­தி­நி­தி­களும் வலி­யு­றுத்­தி­னார்கள். இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அவர்கள் தெரி­வித்த கருத்­துக்கள் வரு­மாறு,

அமைச்சர் பழனி திகாம்­பரம்

மோச­டி­கா­ரர்கள், சட்­டங்­களை மீறு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தனது வாளைச் சுழற்­றப்­போ­வ­தாக ஜனா­தி­பதி அறி­வித்­துள்ளார். அது அவ­ரு­டைய மிகச் சிறந்த அறி­விப்­பா­கவே பார்க்­கின்றோம். இவ்­வா­றான தலை­வர்கள் இந்த நாட்­டிற்கு அவ­சியம் என்று நாம் கூறு­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் அவ­ரு­டைய கட்­சியைச் சார்ந்த ஊவா மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக இருக்­கின்­றவர் தொடர்பில் சரி­யா­ன­தொரு பதி­லினை அளிப்­ப­தற்கு ஜனா­தி­பதி தவ­றி­யுள்ளார். சட்­டத்­திற்கு முர­ணான செயற்­பாட்­டினை மேற்­கொண்ட முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காது அவ­ரி­ட­மி­ருந்து கல்வி அமைச்சு மட்­டுமே மீளப்­பெ­றப்­பட்­டுள்­ளது. இத­னை­யிட்டு நாங்கள் மிகவும் வேத­னை­ய­டை­கின்றோம்.

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ பத­வியில் இருந்த காலத்தில் வௌ்ளைவான்கள் இருந்­தன. அச்­சு­றுத்­தல்கள் இருந்­தன. ஆனால் தமிழ் அதிபர் ஒருவர் எங்கும் முழந்­தா­ழிட்­ட­தாக வர­லா­றில்லை. ஆகவே உட­ன­டி­யாக தமிழ் அதி­பரை முழந்­தா­ழிடச் செய்த முத­ல­மைச்­சரை அவ­ரு­டைய பத­வி­யி­லி­ருந்து நீக்­க­வேண்டும் என்று மீண்டும் வலி­யு­றுத்­து­கின்றோம்.

அர­ச­சே­வை­யா­ளர்கள் இந்த நாட்­டுக்­காவும் மக்­க­ளுக்­காவும் சேவை­யாற்­று­ப­வர்கள். தற்­போது அதிபர் ஒரு­வ­ருக்கு இத்­த­கைய நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது­தொ­டர்பில் ஆட்­சி­யா­ளர்கள் நட­வ­டிக்­கை­களை எடுக்­காது விட்டால் எதிர்­கா­லத்தில் அரச சேவை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக மோச­மாக அர­சியல் அதி­காரம் கொண்­ட­வர்கள் நடந்­து­கொள்ளும் மோச­மான நிலை­மையே ஏற்­படும் ஆபத்­துள்­ளது.

இது­வொ­ரு­பு­மி­ருக்­கையில் தற்­போது மாகாண கல்வி அமைச்­சா­னது செந்தில் தொண்­ட­மா­னுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது முத­ல­மைச்சர் சமார சம்பத் போன்ற மற்­று­மொ­ரு­வ­ரி­டத்­தி­லேயே மாகாண கல்வி அமைச்சு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ் பெண் அதி­ப­ருக்கு அநீதி இழைக்­கப்­பட்­ட­மைக்கு பிரா­யச்­சித்தம் தேடு­வ­தற்­கா­கவே கல்வி அமைச்சுப் பதவி செந்தில் தொண்­ட­மா­னுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மாகாண கல்வி அமைச்சு பத­வி­யா­னது செந்தில் தொண்­ட­மா­னுக்கு வழங்­கி­யமை தவ­றான செயன்­மு­றை­யாகும். ஆகவே ஜனா­தி­பதி அது­கு­றித்தும் மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்டும்.

முத­லை­மச்சர் விட­யத்தில் இரா­ஜங்க அமைச்சர் டிலான் பெரோ மாறுப்­பட்ட நிலை­மையில் உள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சி­யினைச் சேர்ந்த ஒருவர் இத்­த­கைய செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருப்­பா­ராயின் அவர் நிச்­ச­ய­மாக பதவி விலக வேண்டும். ஆனால் சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்­தவர் அவ்­வாறு செய்தால் அதற்கு நியாயம் கற்­பிக்கும் வகையில் கருத்­துக்­களை அவர் கூறு­கின்றார். எவ­ருக்கும் இரண்டு நிலைப்­பாடு இருக்க முடி­யாது. அதே­போன்று மேல்­மா­காண முத­ல­மைச்­சரும் வேறெரு கருத்­தினை கூறு­கின்றார். ஐக்­கிய தேசியக் கட்சி சரியோ பிழையே அக் கட்­சி­யி­லி­ருந்து தற்­போது அமைச்­சர்கள் இருவர் தமது பத­வி­களை இரா­ஜி­னா­மச்­செய்­துள்­ளனர்.

ஆகவே இந்த விட­யத்தில் நாம் ஜனா­தி­ப­தி­யித்­தி­லி­ருந்தே நட­வ­டிக்­கை­களை எதிர்­பார்க்­கின்றோம். அவர் கூறு­வ­தைப்­போன்று இந்த விட­யத்தில் உட­ன­டி­யாக தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அவ­ரு­டைய வாக்­கு­று­தி­களை நம்­பியே எமது மக்கள் தமது வாக்­கு­களை வழங்­கி­யுள்­ளார்கள். ஆகவே அவர்­களின் நம்­பிக்­கையை வீண­டிக்­க­கூ­டாது என்றார்.

வடிவேல் சுரேஷ் எம்.பி

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் உரை­யாற்­று­கையில், பதுளை மகளிர் கல்­லூரி பெண் அதி­பரை முழந்­தா­ழிட செய்த சம்­பவம் மூன்றாம் திகதி இடம்­பெற்­றது. அதன் பின்னர் அச்­சம்­வத்­தினை மூடி­ம­றைக்கும் நோக்­குடன் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு கொங்­கிறீட் இட்டு நிரந்­த­ர­மாக மூடு­வ­தற்கே முயற்­சித்­தார்கள். ஆனால் அது முடி­யாது போனது. கடந்த 9ஆம் திகதி முதல் அந்த விட­யங்கள் வெளிக்­கொண்டு வரப்­பட்டு தற்­போது பாரா­ளு­மன்ற தெரி­விக்­கு­ழு­விலும் விசா­ரணை இடம்­பெற்­றுள்­ளது.

அந்த பெண் அதிபர் தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தியை பகி­ரங்­க­மாக கூறி­யுள்ளார். எவ்­வாறு முழந்­தா­ழிட்டேன் என்று மக்கள் மத்­தியில் பொலி­ஸா­ரி­டத்தில், ஊட­கங்­க­ளி­டத்தில், வைத்­தி­ய­சா­லையில் பாரா­ளு­மன்ற குழுவில் என அனைத்து இடங்­க­ளிலும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். மிக அண்­மையில் தனது கணவை இழந்து தனி­மை­யாக வாழும் ஒரு பெண்­ணுக்கு இவ்­வா­றான அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­ற­மையை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடியும்.

நாங்கள் பெண்கள் உரி­மைகள் தொடர்பில் பேசு­கின்றோம். பெண்­க­ளுக்­கான அங்­கீ­காரம் வேண்டி உள்­ளு­ராட்சி மன்­றங்­களில் 25சத­வீத இட­ஒ­துக்­கீடு வழங்கி சட்­டங்­களை நிறை­வேற்­று­கின்றோம். அவ்­வா­றெல்லாம் செய்து விட்டு பெண்­களை இவ்­வாறு நடத்­து­வது நியா­யாமா? ஓவ்­வொரு வரு­டமும் கல்வி அமைச்­சுக்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­ய­வேண்டும் என்று வாதிக்­கின்றோம். கல்விச் சேவையை வழங்கி நாளைய தலை­வர்­களை உரு­வாக்கும் ஒரு குரு­வுக்கு இவ்­வாறு அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தென்றால் நாம் எங்­கி­ருக்­கின்றோம் என்­பது குறித்து சிந்­திக்க வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள இல­வசக் கல்­வித்­து­றைக்கு என்ன நிகழ்ந்­தி­ருக்­கின்­றது. தேசிய கல்விக் கொள்­கையை அமுல்­ப­டுத்தி உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இந்­த­வி­ட­யத்தில் தம­தங்­களைச் செய்ய முடி­யாது. விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்ய முடி­யாது. பெண் அதி­ப­ருக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு உட­ன­டி­யாக நீதி வழங்­கப்­பட வேண்டும்.

இவ்­வாறு ஒரு­பக்கம் அநீதி இழக்­கப்­பட்­டி­ருக்­கையில் மறு­பக்­கத்தில் என்ன நடை­பெற்­றி­ருக்­கின்­றது கீரி­யி­ட­மி­ருந்து மாகாண கல்வி அமைச்­சினைப் பெற்று நரி­யி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது அமைச்­சினைப் பெற்­றுள்ள செந்தில் தொண்­டமான் ஏற்­க­னவே பாரதி வித்­தி­யா­லத்­திற்குச் சென்று அதி­பரின் கதி­ரையில் அமர்ந்த ஒரு­வ­ரே­யாவார். அது­மட்­டு­மன்றி அவர் மேசையில் இரண்டு கால்­க­ளையும் வைத்­த­வாறே யாரு­டனும் பேச முற்­ப­டுவார். இத்­த­கைய ஒருவர் கல்வி அமைச்­சுக்கு பொருத்­த­மா­ன­வரா?

இலங்­கையில் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் வாழ்ந்­தாலும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் கலா­சாரம் இருக்­கின்­றது. இலங்­கையில் பிறந்து கல்வி கற்­றி­ருக்­க­வேண்டும். அவ்­வாறு கல்வி கற்­றி­ருந்தால் அத்­த­கைய கலா­சா­ரங்­களை அவர்­களால் அறிந்­தி­ருக்க முடியும். இங்கும் இந்­தி­யா­வைப்­போன்று பந்தா அர­சியல் செய்­ய­மு­டி­யாது. அது இந்த நாட்­டுக்­கான கலா­சா­ர­முமம் அல்ல. இதனை புரி்ந்­து­கொள்ள வேண்டும்.

செந்தில் தொண்­டமான் பத­வியை ஏற்­றதும் குறித்த பாட­சா­லைக்கு செல்­கின்றார். அவர் உட­ன­டி­யாகச் செல்ல வேண்­டிய அவ­சியம் என்ன? இத்­தனை நாட்­க­ளாக பிரச்­சினை காணப்­பட்­ட­போது ஏன் அவர் செல்­ல­வில்லை. பெண் அதிபர் உட்­பட மலைய மக்கள் செய்த பாவம் என்ன? இத்­த­கை­ய­வொ­ரு­வ­ருக்கு அமைச்­சுப்­ப­த­வியை வழங்­கி­யதன் மூலம் மலை­ய­மக்­களின் நிலைமை எண்ணைச் சட்­டியில் இருந்து நெருப்­பிற்குள் விழுந்த கதை­யாக மாறி­யுள்­ளது.

இந்த நாட்டின் அனைத்து ஜனா­தி­ப­தி­களும் மலைய மக்­களின் வாக்­குகள் இன்றி ஆட்­சிக்கு வர­வில்லை. இதனை அனை­வரும் புரிந்து கொள்­ள­வேண்டும். 31ஆம் திகதி நடை­பெறும் பாரிய ஆர்ப்­பாட்­டதில் இலங்கை தேசிய தோட்­டத்­தொ­ழி­லாளர் சங்கம் முழு­மை­யாக பங்­கேற்று தனது கடு­மை­யான கண்­ட­னத்­தினை வெ ளிப்­ப­டுத்தும். இவ்­வா­றான முத­லை­மைச்சர் ஒருவர் பத­வியில் இருந்து மட்­டு­மல்ல அர­சி­ய­லி­லி­ருந்தே வெ ளியேற்­றப்­பட வேண்டும்.

அது­மட்­டு­மன்றி எங்­கி­ருந்தோ பர­சூட்டில் வந்­தி­றங்கி கறுப்புக் கண்­ணா­டியை அணிந்­த­வுடன் அவர்­க­ளுக்கு அமைச்­சுப்­ப­த­வியை வழங்க முடி­யுமா? இத்­த­கைய அநீ­தி­களை பார்த்­துக்­கொண்டு தொடர்ந்தும் பொறுத்­துக்­கொண்­டி­ருப்­ப­தற்கு மலைய மக்கள் முட்­டாள்கள் அல்லர். பெண் அதி­ப­ருக்கு நீதி கிடைப்­ப­தற்கு நாம் அர­சி­யலில் இருப்­பது தான் தடை என்றால் அதனை தூக்கி எறிந்து விட்டு வீதிக்­கி­றங்­கவும் தயா­ரா­கவே இருக்­கின்றோம் என்றார்.

தில­கராஜ் எம்.பி

நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மயில்­வா­கனம் திலராஜ் உரை­யாற்­று­கையில்,

ஊவா மாகாண முத­ல­மைச்­சரின் கீழ் கல்வி அமைச்சுப் பொறுப்பு காணப்­பட்­டாலும் தமிழ் விட­யங்­களை கையள்­வ­தற்­கான பொறுப்­பினை செந்தில் தொண்­ட­மா­னி­டத்தில் தான் முத­ல­மைச்சர் வழங்­கி­யி­ருந்தார். அவ­ரது அமைச்­சான வீதி அபி­வி­ருத்தி அமைச்சின் கட்­டத்­தி­லேயே தமிழ் கல்வி விட­யங்­களை மேற்­பார்வை செய்யும் பகுதி காணப்­பட்­டது.

அவ்­வா­றான நிலையில் முத­ல­மைச்­ச­ரி­டத்தில் இருந்த கல்வி அமைச்சுப் பொறுப்பு தற்­போது செந்தில் தொண்­ட­மா­னி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செயற்பாடானது ஏற்கனவே அவரிடத்தில் அளிக்கப்பட்ட பொறுப்பினை முழுமையாக நிறைவேற்றாத நிலையில் மீண்டும் அவரிடத்தில் முழமையான பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் செந்தில் தொண்டமான் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அரசசேவையில் இருந்த தபால் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பில் பண்டாரவளை நீதிமன்றத்தில் நீதி விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அரச சேவையாளரை தாக்கி விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் அத்தகையவொருவருடத்தில் அதிகாரம் கையளிக்கப்படுவது குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

ஏற்கனவே ஆனைமடுவ பகுதியில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடையவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமையானது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இச்சம்வம் குறித்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அது பாரதூரமானதாக அமைந்துவிடும். ஆகவே ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கையை எடுப்பதோடு மட்டுமின்றி மாகாண அமைச்சுப்பதவி வழங்கியமை தொடர்பில் உடனடியாக தலையீடு செய்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 12 =

*