;
Athirady Tamil News

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு….!!

0

கொழும்பு நோக்கி வந்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று(25) காலை 6.10 மணியளவில் சிலாபம்- கொழும்பு வீதியின் காக்காப்பள்ளி சந்திக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பஸ்ஸின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலால் பஸ்ஸின் முன்பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், இதில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*