;
Athirady Tamil News

செல்பியால் ஏற்பட்ட விபரீதம்: ரயில் மோதி உயிருக்கு போராடும் வாலிபர் – வீடியோ இணைப்பு..!!

0

ஐதராபாத் சர்வநகரில் வசித்து வருபவர் சிவா. ஜிம்மில் உடற்பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நண்பர்களுடன் ஐதராபாத் பரத்நகர் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது தண்டவாளம் அருகே நின்று ரெயில் வரும் போது செல்போனில் செல்பி எடுக்க சிவா முடிவு செய்தார்.

அதன்படி தண்டவாளம் அருகே நின்று கொண்டு ரெயிலுக்கு காத்து இருந்தார். அப்போது ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதை பார்த்ததும் பயப்படாத சிவா செல்போனை இடது கையில் பிடித்தப்படி போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

தண்டவாளம் அருகே வாலிபர் நிற்பதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ‘ஹாரன்’ அடித்தப்படி ரெயில் வேகத்தை குறைந்தார். ஆனாலும் ரெயில் சிவா மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை நண்பர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.சிவா மீது ரெயில் மோதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது தொடர்பாக சிவா மீது ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த பிறகு சிவாவுக்கு கவுன்சிலிங் கொடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*