;
Athirady Tamil News

ரெயில் தண்டவாளத்தில் படுத்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்கள் கைது..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் புதிய சாகச முயற்சியில் ஈடுபட்டார். அவர் ரெயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு உயிர்தப்பினார். தேதி இல்லாமல் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட பலர் வாலிபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வித்தியாசமாக செய்வதாக நினைத்து இளைஞர் உயிரை பணயம் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவது முட்டாள் தனமானது என காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இது போன்ற சாகச முயற்சிகளின் போது மோசமாக ஏதும் நடக்கும் அபாயம் உள்ளது. இந்த இளைஞர் மிகவும் அபாயகரமான காரியத்தை செய்துள்ளார். இது மிகவும் முட்டாள் தனமான செயலாகும் என கூறினார்.

மேலும் பலர் அவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்கள் கூறி உள்ளனர். இது போன்ற செயல்கள் மற்ற இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணமாக அமையும். யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளனர். அந்த இளைஞரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், வீடியோவில் இருப்பது அனந்தடாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதில் மாக்பூல் மற்றும் அவரது நண்பர் என்பதை கண்டுபிடித்தனர். அந்த இளைஞர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யப்பட வில்லை. இது போன்ற முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

இது குறித்து மாக்பூல் வெளியிட்ட வீடியோ கிளிப்பில், ‘நான் தவறு செய்து விட்டேன். யாரும் இதை முயற்சி செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யாத போலீசாருக்கு நன்றி’ என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*